சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
    உள்ளிக்கோட்டையை அடுத்த சம்பட்டிக்குடிகாடு பிரதானசாலையைச் சேர்ந்தவர் சி. விவேகானந்தம். இவர், புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு, உள்ளிக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்தினருடன் சென்றாராம். வியாழக்கிழமை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். வீட்டினுள் சென்று பார்த்தபோது எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டி, சேமிப்பு உண்டியல் மற்றும் விலை உயர்ந்த பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்  பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai