Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள கெழுவத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    பெருகவாழ்ந்தானை அடுத்த கெழுவத்தூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரெத்தினம் மனைவி மலர்க்கொடி. இவர் புதன்கிழமை மாலை வீட்டைப் பூட்டிவிட்டு, அருகிலுள்ள கடைக்குப் பொருள்கள் வாங்கச் சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடந்துள்ளது. மலர்க்கொடி வருவதையறிந்த மர்மநபர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
    இதுகுறித்த புகாரின்பேரில், பெருகவாழ்ந்தான் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், பெரியகுளக்கரையைச் சேர்ந்த உத்திராபதி மகன் செல்வம் ( 21), மலர்க்கொடியின் வீட்டில் திருட முயன்றது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai