Enable Javscript for better performance
12 முதல் பருத்தி ஏலம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்தி ஏலம் ஜூன் 12- ஆம் தேதி தொடங்க உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    திருவாரூர் மாவட்டத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் இயங்கி வரும், திருவாரூர் விற்பனைக் குழுவில் 8 ஒழுங்குமுறை  விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் திருவாரூர்,  குடவாசல் மற்றும் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது. 
    கடந்த ஆண்டு திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகளால் 2,591.200 மெட்ரிக் டன் பருத்தி  (மொத்த மதிப்பு ரூ.11 கோடியே 65 லட்சத்து 53 ஆயிரம்) ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டுவரப்பட்டு, மறைமுக ஏலம் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. 
    இதேபோல், குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 416.400 மெட்ரிக் டன்னும் (மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 137) மெட்ரிக் டன்னும்,  வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 244 மெட்ரிக் டன் பருத்தியும்  (மதிப்பு ரூ.1 கோடியே 29 லட்சத்து 66 ஆயிரத்து 913) மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 
     நிகழாண்டு பருத்தி ஏலம், ஜூன் 12 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முற்பகல்  குடவாசல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், பிற்பகல் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும், ஜூன் 13- ஆம் தேதி பிற்பகல் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் பருத்தி ஏலம் தொடங்கப்பட உள்ளது. 
    மேலும், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காலையில் குடவாசல்  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் பிற்பகல் திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் புதன்கிழமை பிற்பகல் வலங்கைமான் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது.
    இந்த பருத்தி ஏலத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்க உள்ளதால்,  விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை,  ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்து, விற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல் ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai