சுடச்சுட

  

  தொடக்கக் கல்வித் துறையை  பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பதைக் கண்டித்து, திருவாரூரில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
  தொடக்கக் கல்வித் துறையை பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பதை ரத்து செய்ய வேண்டும். பணி நிரவலை ரத்து செய்யவேண்டும். தொடக்கக் கல்விக்கென தனி அமைச்சரகம் உருவாக்க வேண்டும். வெளிப்படையான கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   திருவாரூர் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் வி.என். கிருபானந்தன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலர் மதிவாணன் கோரிக்கைகள் குறித்துப் பேசினார். இதில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai