சுடச்சுட

  

  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, திருவாரூரில் அண்ணா துப்புரவு பணியாளர் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருவாரூர் நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களை காலமுறை ஊதியம் அடிப்படையில் நிரப்பவேண்டும். 20 ஆண்டுகளாக வழங்கி வந்த வார ஓய்வை மீண்டும் வழங்க வேண்டும். பாதுகாப்பாக பணி செய்யும் வகையில், பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, செருப்பு, சோப்பு, மழைக்கால உடை உள்ளிட்டவற்றை ஆண்டுக்கு இருமுறை வழங்க வேண்டும். 
  குப்பைகள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், சைக்கிள் ரிக்ஷா, கைவண்டி ஆகியவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஊழியர்கள் மீது விரோதப் போக்கை  கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா துப்புரவு பணியாளர் நலச் சங்கத் தலைவர் ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் டி. குமார், செயலாளர் கே. சங்கர், தமிழ்நாடு நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் கே. சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai