Enable Javscript for better performance
தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 09th June 2018 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்யக் கோரி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    2003 முதல் 2006 வரை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆ ண்டுகளாக காலியாக  உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர், மாணவர் விகிதத்தை நிர்ணயம் செய்து உபரி ஆசிரியர் பணியிட நிரவல் முயற்சியை முழுமையாக கைவிட வேண்டும். 
    அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா பள்ளிகளிலும் டிஇடி (டெட்) தேர்வு இன்றி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும், டிஇடி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அடிப்படை வசதியின்றி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளிகளின் புதுப்பிப்பைத் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு இந்த  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி. வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெ.விஜயகாந்த் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai