Enable Javscript for better performance
பனங்காட்டங்குடியில் டெல்டா பப்ளிக் பள்ளி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கூத்தாநல்லூர் வட்டம், பனங்காட்டங்குடியில் டெல்டா பப்ளிக் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இப்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு, தாளாளர்  மற்றும் செயலாளரான என்.ஏ. ஹாஜா பகுருதீன் தலைமை வகித்தார். பொருளாளர் அகமது இப்ராகிம், ஆலோசகர் எஸ். ரவிச்சந்திரன், நிர்வாகிகள் ஜெ. ஜெய்லானி பாட்ஷா, ஏ. அபுபக்கர் சித்திக், பி.எம். தாஜூதீன், ஹக்கீம், எஸ். சிராஜீதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் எம்.ஆர். சந்தனா வரவேற்றார்.
    பள்ளி நிறுவனர் மற்றும் தலைவர் கே. நவாஸ்கனி புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். தொடர்ந்து, வகுப்பறைகளை நிர்வாகிகள்  திறந்துவைத்தனர். 
    விழாவில் கே. நவாஸ் கனி பேசும்போது, இப்பள்ளில் சர்வதேச  தரத்துக்கு இணையான கல்வி கற்பிக்கப்படும். இதற்காக நாகாலாந்து  உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் சிறந்த ஆசிரியர்களை நியமித்துள்ளோம். 
    இப்பள்ளியில் படிப்பவர்கள் சிறந்த சாதனையாளர்களாக உருவாக வேண்டும்.  இப்பள்ளிக்கான அனைத்து வாகனங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
    மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்ததும், அடுத்த நிமிடமே பெற்றோர்களின் செல்லிடப்பேசியில் தகவல் தெரிந்துவிடும். பள்ளி வளாகத்திலேயே, தரமான உணவு வகைகள் தயாரிக்கப்படும் என்றார். 
    நிகழ்ச்சியில், மன்ப- உல்- உலா மெட்ரிக். பள்ளித் தாளாளர் தி.மு. திமிஜிதீன்  மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai