சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளிச் செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கொரடாச்சேரி வட்டார வள மையத்துக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பள்ளிச் செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத் திறனாளி சிறார்களை கண்டறியும் பணி 2 மாதங்களாக நடைபெற்றுவந்தது.
  இதில், கண்டறியப்பட்ட  மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி மையம் தொடக்க விழா,  அம்மையப்பன் (கிழக்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்றது.  இம்மையத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாடநூல்கள், குறிப்பேடுகள், சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டன.
  இந்நிகழ்ச்சியில் அம்மையப்பன் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சி. பிரபு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் குணவதி, ஆசிரியர் பயிற்றுநர்கள் மா.செ. கலைச்செல்வன், கு. கங்காதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai