சுடச்சுட

  

  மன்னார்குடியில் நாளை அம்மா அணியின் கட்சி பெயர், கொடி அறிவிப்பு விழா

  By DIN  |   Published on : 09th June 2018 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திவாகரன் தலைமையில் புதிதாக உதயமாக உள்ள அம்மா அணியின் கட்சி பெயர், கொடியேற்ற விழா திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.
  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனுக்கும், வி. திவாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக திவாகரன் அங்கிருந்து வெளியேறி, அம்மா அணி என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், மன்னார்குடி மூன்றாம்தெருவில் (பின்லே பள்ளி எதிரில்) உள்ள கட்சி அலுவலகத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கட்சியின் பெயரையும், கொடியையும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai