Enable Javscript for better performance
13 இடங்களில் காப்பர் மின் கம்பிகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே 13 இடங்களில் ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டார் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த காப்பர் மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
     உள்ளிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, மின் தடை ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், உள்ளிக்கோட்டையில் கா. பட்டாபிராமன், கோ. திருவள்ளுவன் உள்ளிட்ட 7 பேரின் வயல்களில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் மின் மோட்டாருக்கு அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்த காப்பர் மின் கம்பிகளைத் திருடிச் சென்றனர்.
    இதேபோல், பரவாக்கோட்டையில் சா. ராமலிங்கம், பாண்டியன் உள்ளிட்ட 6 பேர் வயல்களில் ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாருக்கு செல்லும் காப்பர் கம்பியின் இணைப்பைத் துண்டித்து, காப்பர் கம்பியைத் திருடிச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
    இதுகுறித்து பாதிக்கப்பட்ட 13 பேரும் பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் உஷாநந்தினி வழக்குப் பதிந்து நிகழ்விடங்களை ஆய்வு செய்தார். மேலும், இதில் தொடர்புடைய நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai