சுடச்சுட

  

  திருவாரூரில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 13- ஆம் தேதி நடைபெற உள்ளது.
  இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர்   மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  ஜூன் 13-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளிக்கலாம்.  மனுக்களுடன் முன்னாள் படைவீரருக்கான அடையாள அட்டையின் நகலை இணைக்க வேண்டும். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai