Enable Javscript for better performance
950 டன் சன்னரக நெல் செட்டிநாட்டுக்கு அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து சிவகங்கை மாவட்டம், செட்டி நாட்டுக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருப்பு வைக்கப்பட்ட நெல் ஆக மொத்தம் 950 டன் எடையுள்ள சன்னரக நெல் 75 லாரிகளில் வெள்ளிக்கிழமை நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, நெல் அரவைக்காக சிவகங்கை மாவட்டம், செட்டி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai