சுடச்சுட

  

  முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிவந்த லாரியை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
  தம்பிக்கோட்டை கீழக்காடு நீர்த்தேக்கப் பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக முத்துப்பேட்டை போலீஸாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், அப்பகுதியில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மணல் பாரத்துடன் வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, உரிய அனுமதியின்றி மணல் கொண்டுவருவது தெரியவந்தது. இதையடுத்து, மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரான தம்பிக்கோட்டை வடகாட்டைச் சேர்நத ஐயப்பன் மற்றும் உடன்வந்த உலகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai