Enable Javscript for better performance
குறுவை சாகுபடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    குறுவை சாகுபடி: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

    By DIN  |   Published on : 10th June 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12}இல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
     இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் வெளியிட்ட அறிக்கை :
    ஜூன் மாதத்தில் குறுவை, சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்குவதற்கு ஏற்ப, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருக்கும் நிலையில், குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12}ஆம் தேதி அணை திறக்கப்படும். இவ்வாறு அணை திறக்கப்பட்டால், டெல்டா மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை, சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும். குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறக்கும் வகையில், காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து பெறுவதற்கு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல், மேட்டூர் அணை திறக்க சில தினங்களே உள்ள நிலையில், நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், பேரவை விதி 110}இன் கீழ் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 6 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், இந்த ஆண்டும் ஜூன் 12}ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாது என்றும், மேட்டூர் அணையின் நீர் இருப்பு 39.42 அடியாக இருப்பதால் தண்ணீர் திறக்க முடியாது என்றும் அறிவித்திருப்பது, விவசாயிகளின் மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது.
    முதல்வரின் அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த பிறகும், தமிழகத்தின் உரிமையைப் பறிகொடுக்கும் வகையில் முதல்வர் செயல்படுவது வேனையளிக்கிறது. எனவே, டெல்டா மாவட்ட விவசாயிகள் சாகுபடி பணியைத் தங்கு தடையின்றி தொடங்கிட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் காலத்தோடு செய்திட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai