சுடச்சுட

  

  ஜூன் 11 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வுஜூன் 11 முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு

  By DIN  |   Published on : 10th June 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 11 முதல் 21}ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  இதுகுறித்து திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கோ. தனமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  திருவாரூர் மாவட்டத்தில் அரசு,  நகராட்சி, உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல், பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 11 முதல் ஜூன் 21 வரை நடைபெறவுள்ளது.
  திருவாரூர் மாவட்டத்தைப் பொருத்தவரை அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான கலந்தாய்வு திருவாரூர் விளமல் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியிலும், ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கலந்தாய்வு திருவாரூர் துர்க்காலயா சாலை வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்திலும் நடைபெற உள்ளது. பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் காலை 8.30}க்கு வருகை தர வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான ஒப்புகைச் சீட்டையும் தவறாமல் எடுத்து வர வேண்டும்.
  அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு விவரம் :
  அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்துக்குள் பணயிட மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு வரும் ஜூன் 12,   மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 13,  அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு, அரசு, நகராட்சி முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவல் ஆகியவை ஜூன் 14,  முதுகலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், தொழிற்கல்வி பயிற்றுநர்கள் (வேளாண்மை) வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூன் 16,  மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள்  பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 18}ஆம் தேதிகளிலும்   நடைபெறுகிறது.
  உடற்கல்வி ஆசிரியர்கள், கலையாசிரியர்கள், இசையாசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு ஜூன் 19}இல் நடைபெறுகிறது.
  அரசு, நகராட்சி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் ஜூன் 19, பட்டதாரி ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு ஜூன் 20, இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 21}ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
  வட்டாரக்கல்வி அலுவலர், தொடக்க, நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு விவரம் :
  வட்டாரக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 11 முற்பகல், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவியிலிருந்து வட்டாரக் கல்வி அலுவலராகப் பணி மாறுதல் கலந்தாய்வு ஜூன் 11 பிற்பகல், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 12 முற்பகல்,  நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 12 பிற்பகல்,  பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  (ஒன்றியத்துக்குள்) ஜூன் 13 முற்பகல், பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 13 பிற்பகல்,
  பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மற்றும் பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்துக்குள்) ஜூன் 14 முற்பகல், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 16 முற்பகல், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஜூன் 16 பிற்பகல்,  இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு ஜூன் 18, இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  (ஒன்றியத்துக்குள்) மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்துக்குள்) ஜூன் 19 முற்பகல்,  பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு} மாவட்டம் விட்டு மாவட்டம் (வருவாய் மாவட்டம்) கலந்தாய்வு ஜூன் 20, இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டம்) ஜூன்  21}ஆம் தேதியும்  நடைபெற உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai