சுடச்சுட

    

    தொழில் போட்டி: ஆட்டோ ஓட்டுநரின் கழுத்தை அறுத்தவர் கைது

    By DIN  |   Published on : 10th June 2018 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே தொழில் போட்டி காரணமாக ஆட்டோ ஓட்டுநரின் கழுத்தை அறுத்தவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி, காந்தி தெருவைச் சேர்ந்த முகமது யூனிஸ் மகன் நூர் முகமது (37). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், லெட்சுமாங்குடி, காதர் ஒலி நகரைச் சேர்ந்த முகமது ஆரிப் மகன் முகமது சாகுல் ஹமீது (23) என்பவருக்கும் தொழில் போட்டி இருந்து வந்தது.
    இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு முகமது சாகுல் ஹமீது பொதக்குடிக்கு சவாரிக்காக சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த நூர் முகமதுவுக்கும், முகமது சாகுல் ஹமீதுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், நூர் முகமதுவின் கழுத்தை பிளேடால் சாகுல் ஹமீது அறுத்துள்ளார். இதனால் படுகாயம் அடைந்த அவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் நூர் முகமது அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் பி. கவிதா வழக்குப் பதிந்து முகமது சாகுல் ஹமீதை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai