சுடச்சுட

    

    பள்ளிகளை மூடுவதை கைவிடக்கோரி, திருவாரூரில் ஜாக்டோ சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
    பங்களிப்பு ஓய்வூதிய முறையை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை தொடரவேண்டும். 7-ஆவது ஊதியக் குழுவில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை முற்றிலுமாக களைய வேண்டும். 7- ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
    தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பணியிடங்கள் குறைப்பு என்ற பெயரால், ஆள்குறைப்பு என்ற அடிப்படையில் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதை கைவிட வேண்டும். தொடக்கக் கல்வித் துறையை கலைத்துவிட்டுப் பள்ளிக் கல்வியுடன் இணைத்து நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரால் குளறுபடி செய்து, தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலன்கள் பாதிக்கும் வகையில் 1,600 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    அதன்படி, திருவாரூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் ஆர். ஈவேரா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் ஆர். முத்துவேல், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ப. பாரதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
    தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலத் தலைவர் சா. மருதவாணன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் எஸ். துரைராஜ், தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில சட்ட ஆலோசகர் ஆண்ட்ரூஸ், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்க மாநிலப் பொருளாளர் பஞ்சாபகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai