சுடச்சுட

  

  பொது இடங்களில் புகைப் பிடித்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 10th June 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொது இடங்களில் புகைப் பிடித்தால், காவல்துறை மற்றும் பொது சுகாதாரத் துறையினரால் உரிய அபராதம் விதிக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புகையிலைப் பொருள்கள் தயாரிப்புச் சட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:
  திருவாரூர் மாவட்டத்தில் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் தயாரிப்புச் சட்டம் 2003 பிரிவு 5-இன் படி விதி மீறல்களை கண்காணிக்கவும், நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களைத் தடுக்கவும் இந்த கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  இந்த குழு மூலம் நிகழாண்டு ஜனவரி மாதம் முதல் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருள்கள் தயாரிப்புச்சட்டப் பிரிவுகளின்படி, சட்டத்தை மீறியவர்களிடமிருந்து இதுவரை ரூ.86 ஆயிரம் அபராதத் தொகையாக வசூல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
  மேலும், பொது இடங்களில் புகைப் பிடித்தால் காவல்துறை மற்றும் பொது சுகாதாரத் துறையினரால் உரிய அபராதம் விதிக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தை புகையிலை பாதிப்பில்லாத மாவட்டமாக தக்க வைத்துக் கொள்ள அனைவரும் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும் என்றார்.
  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான் லூயிஸ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் துணை இயக்குநர் செந்தில்குமார், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) இருதயராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai