Enable Javscript for better performance
மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி அருகே மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கீழவாடியக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரபாதி (35). இவரது மனைவி கலாராணி(32). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
    இந்நிலையில், கலாராணி தீக்காயங்களுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுதொடர்பாக, முத்துப்பேட்டை போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், கலாராணியை தற்கொலைக்கு தூண்டும் வகையில் உத்திராபதி நடந்துகொண்டதாக தெரியவந்ததாம். இதையடுத்து, உத்திராபதியை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai