சுடச்சுட

  

  முதலாமாண்டு மாணவர் சேர்க்கை: பாரதிதாசன் பல்கலை. உறுப்புக் கல்லூரி புதிய கட்டடத்தில் ஜூன் 11 முதல் கலந்தாய்வு

  By DIN  |   Published on : 10th June 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 11 முதல் 15-ஆம் தேதி வரை தண்டலைச்சேரியில் தொடங்கப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் நடைபெறுகிறது.
  இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் பழ. கௌதமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
  திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் 2018-19-ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையையொட்டி, மொத்தம் உள்ள 360 இடங்களுக்கு 1,310 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தண்டலைச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கட்டடத்தில், ஜூன் 11 காலை 10 மணிக்கு இளங்கலை தமிழ், 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு இளங்கலை ஆங்கிலம், 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு இளங்கலை வணிகவியல் மற்றும் அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு இளங்கலை வணிக மேலாண்மை, 14-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு இளங்கலை கணிதம், 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு சமூகப்பணியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
  மாணவர்கள் விண்ணப்பித்தபோது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டுடனும், ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள அசல் சான்றிதழ்கள் மற்றும் தொகையுடன் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்தில் தங்களது பெற்றோருடன் பங்கேற்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு முறையில் கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் பழ. கெளதமன் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai