Enable Javscript for better performance
உப்பின் தரத்தை பரிசோதிக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    உணவகங்களில் பயன்படுத்தப்படும் உப்பின் தரத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பரிசோதிக்க வேண்டும் என, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  
    இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, பொதுச் செயலர் ரமேஷ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: உணவுக்காக விற்பனை செய்யும் உப்பில் கட்டாயம் அயோடின் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சாதாரண உப்பை  உணவுக்காக விற்பனை செய்தால் உணவுப் பாதுகாப்புத் துறை சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.  இந்த சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒரு சில உப்பு உற்பத்தியாளர்கள், உப்பு பாக்கெட்டின் அடியில் சிறிய எழுத்தில் ஆங்கிலத்தில் இது பதப்படுத்தும் உபயோகத்திற்கு என்றும், இது உணவுக்கு அல்ல என்றும், சாதா உப்பு, கெமிக்கல் கலக்கவில்லை என்றும் பலவித வாசகங்களை குறிப்பிட்டு, பெரும்பாலும் மளிகைக் கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
     இந்த உப்பு பாக்கெட்டில் அயோடின் கலக்கப்படாததால் இதன் விலை குறைவு என்பதால் பெரும்பாலான மளிகைக் கடைக்காரர்கள் இந்த உப்பை வாங்கி கிராமப்புற மக்களுக்கு உணவுக்காக விற்பனை செய்யும் நிலையும் உள்ளது. சில உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த உப்பு விற்பனையாளர்கள் இந்த உப்பு பண்டல்களை நகர் மற்றும் கிராமப்புற உணவகங்களுக்கும் மொத்தமாக விற்பனை செய்கின்றனர். எனவே, உணவக உரிமையாளர்கள் தங்கள் உணவக பயன்பாட்டிற்கு உப்பு கொள்முதல் செய்யும்போது, அயோடின் உப்பை மட்டுமே வாங்க வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தொடர்ந்து உணவகங்களில் பயன்படுத்தும் உப்பின் தரத்தை ஆய்வு செய்து, அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் இல்லா தமிழகமாக மாற துணை நிற்க வேண்டும் என்றும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai