சுடச்சுட

  

  கடன் விற்பனை நிலுவையை ஊழியர்களின் ஊதியத்தில் பிடிக்கக் கூடாது

  By DIN  |   Published on : 11th June 2018 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோ-ஆப்டெக்ஸில் கடன் விற்பனை நிலுவைத் தொகையை விற்பனை செய்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  திருவாரூரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் 54-ஆவது பொதுப் பேரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. 
  தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க  வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா தேர்தல் அறிவிப்பில் கூறியபடி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் பொங்கல் பண்டிகையின்போது ரூ. 5000-க்கு  விரும்பிய துணிகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 
  2017  ஏப்.1 முதல் கோ-ஆப்டெக்ஸில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும், கடன் விற்பனை நிலுவைகளை விற்பனை செய்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  சங்கப் பொதுச் செயலர் தி. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைவர் கே. பாரதி, பொருளாளர் ஜி. ராஜேந்திரன், சங்க ஆலோசகர் எஸ். குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  புதிய நிர்வாகிகள் தேர்வு: தலைவர் கே. பாரதி, பொதுச் செயலர் தி.  விஸ்வநாதன், பொருளாளர் ஜி. ராஜேந்திரன் ஆகியோர் சங்க புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai