சுடச்சுட

  

  குறுவை சாகுபடிக்கு ஜூன் மாத இறுதிக்குள் தண்ணீர் பெற்றுத்தரக் கோரிக்கை

  By DIN  |   Published on : 11th June 2018 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறுவை சாகுபடி செய்யும் வகையில், ஜூன் மாத இறுதிக்குள் தண்ணீர் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை : உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து,  இதுவரை கர்நாடக அணைகளிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற மத்திய அரசை நிர்பந்திக்காமல் குறைந்தபட்சம் பிரதமரை சந்தித்து வலியுறுத்தாமல் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  ஜூன் இறுதியில் தண்ணீர் வழங்கினால்கூட குறுவை சாகுபடி செய்யலாம் என்பதால், அதற்கான உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க  வேண்டும். குறுவைக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நெல்விதை மானியம்,  நடவு மானியம், சல்பேட் ஜிப்சம் மானியம், பயறு வகை மானியம், பசும்தாள் உரம் என 5 திட்டங்களுக்கான நிதி மட்டுமே சிறப்பு தொகுப்பு திட்ட நிதியாகும். எஞ்சிய தொகை ரூ. 66 கோடியும் வழக்கமான திட்டத்துக்கான நிதியாகும். கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில், இந்த சிறப்பு திட்டம் குறைவான தொகையாகும். இந்த சிறப்புத் திட்டமும் குறுவை பயிரிடுகிற வாய்ப்புள்ள அனைவருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், நிலத்தடி நீர் கிடைக்க வாய்ப்புள்ள விவசாயிகள் தான் குறுவை சாகுபடி செய்ய சாத்தியமாகும். எஞ்சிய 2  லட்சம் ஏக்கருக்கும் மேலான விவசாயிகள் குறுவை பயிரிட வாய்ப்பான நிலம் இருந்தும், இவர்களுக்கு எவ்வித நிவாரணம்,  ஏற்பாடு இல்லை. 7-ஆவது ஆண்டிலாவது குறுவை வருமானம் பெறலாம் என்ற நம்பிக்கை கொண்ட விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் ஏற்பாட்டை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குறுவை பயிரிட வாய்ப்பில்லாத விவசாயிகள் அனைவருக்கும் மகசூல் இழப்புத் தொகை வழங்க வேண்டும் என அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai