Enable Javscript for better performance
தடைசெய்யப்பட்ட பொருள்களை விற்ற 8 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்த 8 பேரை போலீஸார் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
    நீடாமங்கலம் பகுதியில் காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான போலீஸார் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காளாஞ்சிமேட்டைச் சேர்ந்த வெங்கட்ராமன் (63) , கண்ணதாசன் (33), செல்லதுரை (53), ராயபுரம்  மரியசூசை (54) ஆகிய 4 பேர் அனுமதியின்றி மதுவிற்றது தெரியவந்ததையடுத்து கைது செய்யப்பட்டனர். 
    இதேபோல், அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக் போன்ற புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நீடாமங்கலம் நந்தகுமார் (50), கோபி (36), அன்புமணி (28), சம்பாவெளி மனோகரன் (58), ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai