சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தார். மற்றொரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.
    மான்கோட்டைநத்தம் பகுதியைச் சேர்ந்த மோகன் மனைவி ஜெயா (38). அதே பகுதியைச் சேர்ந்த சற்குணம் மனைவி தவமணி(45). இவர்கள் இருவரும் தென்பரை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தனர். ஜெயா இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றார். 
    இவர்கள் சென்ற வாகனம், கோவிந்தநத்தம் பகுதியில் செல்லும்போது, அந்த வழியாக வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிறிது நேரத்தில் தவமணி உயிரிழந்தார். ஜெயாவுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டது. இதுகுறித்து, பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான நன்னிலத்தை அடுத்த நார்த்தங்குடியைச் சேர்ந்த சா. முருகானந்தம் (38) என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai