Enable Javscript for better performance
ஓட்டுநர் பலியான வழக்கில் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஒரத்தநாடு வட்டம்,  திருவோணம் அருகே கார் மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஓட்டுநர் பலியான சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருவோணத்தை அடுத்த மாஞ்சக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார் (எ) பெருமாள்(42). கார் ஓட்டுநர். சின்னக்கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (41). மோட்டார் சைக்கிள் மெக்கானிக். இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு சின்னக்கோட்டைக்காடு கிராமத்தில் ஒரு வீட்டினருகே சாலையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது,  அதே சாலையில் வெங்கரை கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்த கார் பெருமாள்  மற்றும் மதியழகன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இரண்டு பேரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், வழியிலேயே பெருமாள் இறந்துவிட்டார். மதியழகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
    புகாரின்பேரில், வாட்டாத்திக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து,  செந்திலை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai