Enable Javscript for better performance
கள்ளநோட்டு மாற்ற முயன்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் அரசு மதுக்கடை பாரில், 500 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    மன்னார்குடி பந்தலடியில் உள்ள அரசு மதுக் கடையுடன் மது அருந்தும் கூடமும் உள்ளது. சு. சத்தியமூர்த்தி என்பவர் இந்த மதுக் கூடத்தை நடத்திவருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த மதுக்கூடத்துக்கு மது அருந்த வந்த, மாதாகோவில் தெருவைச் சேர்ந்த ப. மனோகரன் (48)  500 ரூபாய் நோட்டைக் கொடுத்து, தின்பண்டம் வாங்கியுள்ளார். அந்த 500 ரூபாய் நோட்டு சந்தேகப்படும்படியாக இருந்ததால், இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையத்துக்கு சத்தியமூர்த்தி தகவல் கொடுத்தார். அதன்பேரில், அங்கு வந்த போலீஸார் 500 ரூபாய் நோட்டை பரிசோதித்தபோது, அது கள்ளநோட்டு என தெரியவந்தது. இதையடுத்து, மனோகரனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai