கிருஷ்ணகிரிக்கு 950 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு
By DIN | Published on : 12th June 2018 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீடாமங்கலத்திலிருந்து 950 டன் சன்னரக நெல் அரவைக்காக, கிருஷ்ணகிரிக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் என மொத்தம் 950 டன் எடை கொண்ட சன்ன ரக நெல் மூட்டைகள் லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர், அந்த நெல் மூட்டைகள் அனைத்தும் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு சரக்கு ரயிலில் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.