Enable Javscript for better performance
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழ்கிறது: அமைச்சர் ஆர்.காமராஜ்- Dinamani

சுடச்சுட

    

    சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழ்கிறது: அமைச்சர் ஆர்.காமராஜ்

    By DIN  |   Published on : 12th June 2018 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக திகழ்ந்து வருகிறது என்றார் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ். 
    திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி பள்ளிவாசலில் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியது: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலம் தொடங்கி தற்போது வரை அதிமுகவும், அதிமுக தலைமையிலான ஆட்சியும் தொடர்ந்து சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பொருத்தவரை சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட பொது தலைவராக விளங்கினார்.
    சிறுபான்மையினர் மீது குறிப்பாக இஸ்லாமிய மக்கள் மீது தனிப்பற்று கொண்டவராக விளங்கினார். அதனால்தான் ரம்ஜான் நோன்புக்காக தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5,415 மெட்ரிக்டன் அரிசியை வழங்க உத்தரவிட்டார். இந்த அரிசி வழங்கும் திட்டத்தை பாகிஸ்தான் நாட்டிலிருந்து வெளிவரக்கூடிய பத்திரிகைகளும் பாராட்டின. பலரும் பாராட்டும் செயல்களை செய்த ஜெயலலிதாவின் வழியின்படியே தற்போதைய அரசும் செயல்பட்டு வருகிறது என்றார். நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால், ஜமாத் நிர்வாகிகள் ஜலாலுதீன், ஒளிமுகமது, கலிலுலியா, ஜாஹிர், சேக்அலாவுதீன், பஜ்லுல்ஹக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai