சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே குடும்ப பிரச்னையால் செங்கல்லால் தாக்கப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
     பெரியக்குருவாடி, நடுத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (55). இவரது மனைவி சாவித்திரி (50). குடும்ப பிரச்னை காரணமாக இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல்,  ஜூன் 5-ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், செங்கல்லால் சாவித்திரியை தாக்கினாராம்.
    இதில், பலத்த காயமடைந்த சாவித்திரி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து, விக்கிரபாண்டியன் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவான பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai