சுடச்சுட

    

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 12th June 2018 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் திங்கள்கிழமை ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு பள்ளிகள் மூடுவதை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஆசிரியர் பணியிடங்களை காக்கவும், அரசுப் பள்ளிகள் மூடுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் வெ. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai