சுடச்சுட

    

    நவகிரக தலங்களில் குரு பகவானுக்குரிய தலமான, வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
    இதையொட்டி ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேசுவரர் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பிரதோஷ நாயகர் பிராகார உலா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    இதேபோல், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், கோகமுகேசுவரர் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில், நரிக்குடி எமனேசுவரர் கோயில் உள்ளிட்ட சிவன் திருக்கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai