சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 
    ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 153 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ரெங்கநாதன், துணை ஆட்சியர் (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை) இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai