சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற கோடை பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
    வாசகர் வட்டத் தலைவர் குரு சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், குடவாசல் எம்.ஜி.ஆர். கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: திருவாரூர் மைய நூலகம் தற்போது நூலறிவு மட்டுமே வழங்காமல் பயிற்சி பட்டறைபோல் செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் நூலகங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர். 
    நூலக சாதனையாளர் விருது நூலகர் செல்வகுமாருக்கு வழங்கப்பட்டது. கோடை கால பயிற்சியில் பங்கேற்ற  குழந்தைகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. அத்துடன், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நூலகர்கள், வாசகர்களின் குழந்தைகள் கெளவுரவிக்கப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நூலகர்கள் அன்னப்பழம், மா.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai