சுடச்சுட

  

  கூத்தாநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
  கூத்தாநல்லூர் வட்டம், மேலக்கொண்டாழி வடக்குத்  தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் தங்கபாண்டியன்( 35). இவர், கூத்தாநல்லூர் மின்சார வாரியத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.
  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வேலைக்குச் சென்ற தங்கபாண்டியன், மின்கம்பத்தில் ஏறி, பணி செய்தபோது, எதிர்பாராதவிதமாக, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கபாண்டியனை, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் பெ. முருகேசு மற்றும் அப்பகுதி மக்கள் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
   அங்கு மருத்துவர் இல்லாததால், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தங்கபாண்டியனை மருத்துவர் பரிசோதித்தபோது அவர்  ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. 
  இதுகுறித்து, கூத்தாநல்லூர் காவல் ஆய்வாளர் பி. கவிதா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
  தங்கபாண்டியனுக்கு, பூங்குழலி என்ற மனைவியும், பூபாலன் (5), தருண் (3) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai