சுடச்சுட

  

  முத்துப்பேட்டையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு

  By DIN  |   Published on : 12th June 2018 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்துப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
  இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலாளர் தக்பீர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் முகம்மது மைதீன் வரவேற்றார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன்அன்சாரி,  திருத்துறைப்பூண்டி  எம்எல்ஏ ப. ஆடலரசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன், மஜக துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் தாஜுதீன், குவைத் டிவிஎஸ் நிறுவன அதிபர் டாக்டர் எஸ்.எம். ஹைதர் அலி, சமூக ஆர்வலர் முத்துப்பேட்டை மாலிக் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். 
  எம்எல்ஏ ப. ஆடலரசன் பேசும்போது, இஸ்லாத்தின் கொள்கைகளும்,  நிலைபாடும்  பாராட்டுக்குரியது. இஸ்லாம் மதமல்ல, மார்க்கம். எனவே தான் அனைவரையும் ஈர்க்கிறது என்றார்.
  தமிமுன் அன்சாரி பேசும்போது, முஸ்லிம்கள் இந்த மண்ணின் உரிமைக்காக போராடுபவர்கள், நாங்கள் நிலத்துக்காக, விவசாயத்துக்காக, நீருக்காக, சுற்றுச் சூழலுக்காக அனைவருடனும் இணைந்து போராடுகிறோம் என்றார். 
  நிகழ்ச்சியில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்டச் செயலாளர் சீனி ஜகபர் சாதிக், மாவட்டப் பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன், வர்த்தகர் கழகத் தலைவர் மெட்ரோ மாலிக்,  தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் உப்பூர் ராம்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தமுஎச செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர். நகர பொருளாளர் பஷீர் அலி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai