சுடச்சுட

  

  பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படாததைக் கண்டித்து, நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்கு கர்நாடகத்திடமிருந்து உரிய தண்ணீரைப் பெற்று, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.
  இந்நிலையில், ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால், கண்டனம் தெரிவித்து நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் டி.கே. மார்கஸ், வக்கீல் மகாதேவன், ராதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷமிடப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai