சுடச்சுட

    

    டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 13th June 2018 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் பணிவரன்முறைப்படுத்தக் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,  டாஸ்மாக் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்தி, அரசு ஊழியர்களுக்கு  இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உபரி ஊழியர்களுக்கு அவர்களின் கல்வித் தகுதி, பணி மூப்பு அடிப்படையில் அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்தில் உள்ள நிரந்தர காலிப்பணியிடங்களில் பணி வழங்க வேண்டும். 
    பணி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சிறப்பு பணமுடிப்பு வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகையை நிலுவையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    தொமுச மாவட்டச் செயலாளர் பா. ரவிக்குமார் தலைமை வகித்தார். சிஐடியு, தொவிமு, விசிக உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai