சுடச்சுட

  

  தனியார் பள்ளிகளில் கட்டணம் நிர்ணயிக்கக் கோரி போராட முயன்றவர்கள் கைது

  By DIN  |   Published on : 13th June 2018 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கக் கோரி, திருவாரூரில் போராட்டம் நடத்த முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
   தனியார் கல்வி நிலையங்களின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். மூன்றாண்டுக்கு ஒருமுறை தனியார் கல்வி நிலையங்களை ஆய்வு செய்து, அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட மாசிலாமணி கமிட்டி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும். 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என இந்திய மாணவர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
  அதன்படி, விளமல்  கல்பாலத்திலிருந்து மாவட்டச் செயலாளர் ஆ.பிரகாஷ் தலைமையில் மாநிலத் தலைவர் மாரியப்பன் உள்ளிட்டோர் பேரணியாக செல்ல முயன்றனர். அங்கிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 70 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai