சுடச்சுட

    

    பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்: பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

    By DIN  |   Published on : 13th June 2018 07:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்ற பாஜக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    கூட்டத்துக்கு பாஜக நகரத் தலைவர் பால. பாஸ்கர் தலைமை வகித்தார். இதில், நகராட்சிக்கு உள்பட்ட திருமால்புரம், திருமலைநகர், மூவேந்தர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை மேம்படுத்த வேண்டும். மேலப்பாலத்தில் வாடகை லாரிகள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். குடிநீர் விநியோகம் சீர்செய்யப்பட வேண்டும். தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் ஹபீப் முகமது கலந்துகொண்டார். பாஜக நகர பொதுச்செயலர் ஆர். ரகுராமன், நகர ஆசிரியர் பிரிவு தலைவர் சேதுராஜன், மாவட்ட பிரசார பிரிவு செயலர் சுப்ரமணியன், வர்த்தகப் பிரிவு செயலர் வீர. திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai