சுடச்சுட

    

    மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை மூதாட்டியைத் தாக்கி அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். 
    மன்னார்குடி பிருந்தாவன்நகரை சேர்ந்த அய்யாவுத் தேவர் மனைவி பொன்னம்மாள் (75). காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துக் கொண்டு பொன்னம்மாள் தூங்கிக்கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பொன்னம்மாள் முகத்தை துணியால் மூடி அவரை தாக்கி, இரண்டு பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai