சுடச்சுட

  

  மேட்டூர் அணையிலிருந்து  தண்ணீர் திறந்துவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரசார இயக்கம்

  By DIN  |   Published on : 13th June 2018 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.
  சவளக்காரன் கடைவீதியில் நடைபெற்ற பிரசார இயக்கத் தொடக்க விழாவுக்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் ஆர். சதாசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி பிரசார இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். குறுவை சாகுபடிக்கு உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும், காவிரி நதிநீர் ஆணையம் செயல்பட நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கான தண்ணீர் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும், குறுவைக்கு தண்ணீர் இல்லை என்றால், ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டன.
  நிகழ்ச்சியில், மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை. அருள்ராஜன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். மாரியப்பன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பி. பாஸ்கரவள்ளி, கட்சியின் கிளைச் செயலர் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  கூத்தாநல்லூரில்...
  கூத்தாநல்லூர் அருகே லெட்சுமாங்குடியில் செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் குறுவைக்கு உடனடியாக மேட்டூர் அணையை திறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரச் செயலர் கே. நாகராஜ் தலைமையில் நடைபெற்ற பிரசார பயண, தெருமுனைக் கூட்டத்தில், விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர். மணிமாறன், பொருளாளர் கே. ராமதாஸ், நகர செயற்குழு உறுப்பினர் டி. கண்ணையன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க  நகரச் செயலர் வி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, பழையனூர், சாத்தனூர், ஓவர்ச்சேரி, கோட்டகச்சேரி,   வடபாதிமங்கலம் உள்ளிட்ட   ஊர்களில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. இதையடுத்து, பழையனூர், சாத்தனூர், ஓவர்ச்சேரி, கோட்டகச்சேரி,   வடபாதிமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai