சுடச்சுட

  

  "ரத்த தானத்தின் அவசியத்தை மாணவர்கள் தெரிந்துகொள்வது அவசியம்'

  By DIN  |   Published on : 13th June 2018 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரத்த தானம் செய்வதன் அவசியத்தை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் அறிவுறுத்தினார்.
   திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர் ரத்த தான இயக்கத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:
   ரத்த தானம் செய்வதன் அவசியத்தையும், அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் மருத்துவ மாணவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். எந்த விசயத்தையும் சொல்வதை விட செய்து காண்பித்தால், அது மக்களை எளிதில் சென்றடையும். அதுபோல, ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்துகிற மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் தாமாக முன்வந்து ரத்த தான இயக்கத்தை தோற்றுவித்ததன் மூலம் இந்த நோக்கம் சமுதாயத்தை எளிதாக சென்றடையும்.  இதனால், எவ்வித பின்விளைவும் இல்லை என்றார். 
  பின்னர், ரத்த தான இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முகாமை மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், ரத்த தானம் செய்து தொடங்கி வைத்தார். இதையடுத்து தலைமை மயக்கவியல் மருத்துவர் சத்யன், தலைமை நோய் குறியியல் மருத்துவர் கல்யாணி, தலைமை மனநல மருத்துவர் புகழேந்தி மற்றும் 48 மருத்துவ மாணவர்கள் ரத்த தானம்
  செய்தனர்.  
  தொடர்ந்து, ரத்த தான இயக்கத்தின் குறியீடு வெளியிடப்பட்டு, கேக் வெட்டப்பட்டது.  ரத்த தானம் செய்யும் முறை குறித்து குறும்படம் வெளியிடப்பட்டது. மேலும், ரத்த தானம் தொடர்பான கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
   விழாவில் பால்மாற்று மருத்துவ அலுவலர்பிரதியுஷா, மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் ராஜா, துணை கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள்
  பங்கேற்றனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai