சுடச்சுட

  

  திருவாரூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் 2-ஆம் நாளாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெ. சோமசுந்தரம் தலைமை வகித்தார். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலர்கள், ஊர்ப்புற நூலகர்கள், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டு. 
  21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை காக்கவும், அரசுப் பள்ளிகளை மூடுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai