சுடச்சுட

  

  உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் ஊழல் குறித்து உரிய விசாரணை தேவை

  By DIN  |   Published on : 14th June 2018 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
  இதுகுறித்து திருவாரூரில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
  தமிழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில் ஊழல் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருப்பது சுகாதாரத் துறையா அல்லது ஊழல் நலத்துறையா என்பது புரியவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 -இல் தண்ணீர் திறக்க முடியாது என முதல்வர் அறிவித்துவிட்டார். இந்த ஆட்சியில் எந்த பிரச்னைக்கும் சரியான முறையில் தீர்வு காணப்படுவதில்லை.
  பிரதமர், கர்நாடக முதல்வரையும் உடற்பயிற்சி செய்ய சவால் விடுத்திருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. மோடி, அரசியல்வாதியா அல்லது விளையாட்டு வீரரா என்ற சந்தேகம் எழுகிறது.
  ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பதே சரியாக தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வருவது உண்மை என கூறுவது அவரது படங்களுக்காக உருவாக்கும் விளம்பரமாகவே பார்க்கப்படுகிறது. அவர் மேல்தட்டு வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் அடித்தட்டு மக்களின் பிரச்னை குறித்து அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. வெற்றிகரமான அரசியல்வாதியாக வருவதற்கான அரசியல் ஞானம் அவருக்கு இல்லை என்றார் பாலகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai