சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த நரிக்குடியில் எழுந்தருளியுள்ள எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
    இதை முன்னிட்டு, எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் மற்றும் அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. கோயில் எம தீர்த்தத்தில் (குளம்) பக்தர்கள் நீராடி, பிதுர்தர்ப்பணங்களைச் செய்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.
    இதேபோல், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர், திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர் சன்னிதிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai