சுடச்சுட

    

    கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஆறுதல்

    By DIN  |   Published on : 14th June 2018 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகே நீட் தேர்வு எழுத மகனைஅழைத்துச் சென்றபோது உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினரை செவ்வாய்க்கிழமை மத்திய இணை அமைச்சர். பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    விளக்குடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமியின் வீட்டுக்கு சென்ற பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு (எ) முருகானந்தம் ஆகியோர் இறந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாரதிமகாதேவி, மகன் கஸ்தூரி ஆகியோருக்கு ஆறுதல் கூறி,  ரூ. 1லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். மத்திய இணை அமைச்சருடன் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா, மண்டலத் தலைவர் வரதராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai