சுடச்சுட

  

  திருவாரூரில் பருத்தி ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நடைபெற்ற பருத்தி ஏலத்தில் சேந்தமங்கலம், எட்டியலூர், பொன்னிரை, கல்லிக்குடி, ஆதனக்குடிபேட்டை, ஆத்தூர், தென்னவராயநல்லூர், நல்லியமகாதேவி, முகுந்தனூர், கீழ்படுகை, தேவூர், குருக்கத்தி, கிள்ளியூர், கீழதிருமதிக்குன்னம், அகரதிருநல்லூர், அடிபுதுச்சேரி, அடியக்கமங்கலம், வடகண்டம், திருவாரூர், புலிவலம் ஆகிய பகுதிகளிலிருந்து 454 விவசாயிகள் பங்கேற்றனர். தஞ்சை, நாகை, திருவாரூர், பண்ருட்டி, சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளிலிருந்து 10 வணிகர்கள் பங்கேற்றனர். மேலும்,  73.6 மெட்ரிக் டன் பருத்தி ஏலம் விடப்பட்டது.
  இதில் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 5189 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 4406 -க்கும் சராசரியாக ரூ. 4800 -க்கும் பருத்தி விலைபோனது.
  இதை மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) கே. ரவிச்சந்திரன் பார்வையிட்டார். இதில் வேளாண் இணை இயக்குநர் ஏ. சந்துரு, விற்பனைக்குழுச் செயலர் ஆர். சேரலாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai