சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சமையலின்போது தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கர்ப்பிணி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
  கருவாக்குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அன்பு மனைவி சுதா (31). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சுதா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த மே 18 -ஆம் தேதி வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்தபோது, சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த சுதா தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து, சுதா அண்மையில் வீடு திரும்பியுள்ளார்.
  இந்நிலையில், சுதாவுக்கு ஜூன்11 -ஆம் தேதி மீண்டும் உடல்நிலை சுகவீனம் அடைந்ததையடுத்து, சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
  மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சுதாவின் வயிற்றில் வளர்ந்து வந்த சிசு உயிரிழந்ததால், சுதாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுதா உயிரிழநதார். இதுகுறித்து சுதாவின் சகோதரர் பாலசுப்பிரமணியன்  வடுவூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai