Enable Javscript for better performance
நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு 950 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு 950 டன் சன்னரக நெல் அனுப்பி வைப்பு

    By DIN  |   Published on : 14th June 2018 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலத்திலிருந்து கோவைக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரயிலில் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைக்கப்பட்ட நெல், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருப்பு வைக்கப்பட்ட நெல் என மொத்தம் 950 டன் நெல் மூட்டைகள், சுமார் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். 
    இதைத்தொடர்ந்து, நெல் அரவைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai